இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருநாடுகளும் மீண்டும் விவாதிக்க வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
ஜி20 மாநாட்டிற்காக டெல்லி வரவிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 2008இல் கையெழுத்தான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோர் பதவியில் இருந்த போது இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
நீண்ட மௌனத்திற்குப் பிறகு, அந்த ஒப்பந்தம் குறித்து இருநாடுகளும் விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது இது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
சஜின்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
அமெரிக்க நிறுவனங்களான GE மற்றும் வெஸ்டிங்ஹவுஸ் அணுஉலைகளை இந்தியாவிற்கு விற்க ஒப்புக்கொண்டது. எனினும், அது தவிர இந்த ஒப்பந்தத்தில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.
அணுஉலைகளை அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்த பிறகு, செர்னோபில் அல்லது ஃபுகுஷிமா போன்ற அணுக்கசிவின் விளைவால் பேரழிவு ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.
ஆனால், 1984-ல் நடந்த போபால் விஷவாயு பேரழிவைக் கருத்தில் கொண்டு இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது.
போபால் விஷவாயு கசிவு பேரழிவில் ஒரு அமெரிக்க நிறுவனம் சம்பந்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து மீண்டும் இருநாடுகளும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.