Page Loader
இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன 
இந்த பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன 

எழுதியவர் Sindhuja SM
Jun 14, 2023
05:35 pm

செய்தி முன்னோட்டம்

ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் அறிக்கை 2023 இன் படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு 6,500 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் அறிக்கை என்பது உலகளவில் பணக்காரர்களின் இடம்பெயர்வை மதிப்பிடும் ஒரு குழுவாகும். இந்த குழுவின் கணிப்பின்படி, இந்த ஆண்டு 6,500 இந்திய கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேற இருக்கிறார்கள். இந்த பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு சீனாவை சேர்ந்த 13,500 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஆனால், சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளது.

ஜிகிடின்

இந்த ஆண்டு  1,28,000 கோடீஸ்வரர்கள் உலகளவில் இடம்பெயர்வார்கள் 

சென்ற வருடம், இந்தியாவை விட்டு 7,500 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது. $1 மில்லியன்(சுமார் ரூ.8 கோடி) அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பு வைத்திருப்பவர்களை ஹென்லியின் அறிக்கை கோடீஸ்வரர்களாக கருதுகிறது. மேலும், 2023-2024 ஆம் ஆண்டில் 1,28,000 கோடீஸ்வரர்கள் உலகளவில் இடம்பெயர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, பொதுவாக இந்தியாவில் இருந்து இடம்பெயரும் இது போன்ற கோடீஸ்வரர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். கோல்டன் விசா, வருமான வரி, வலுவான வணிக சுற்றுச்சூழல் போன்ற சலுகைகளுக்காக கோடீஸ்வரர்கள் இந்த நாடுகளை தேர்ந்தெடுப்பதாக நம்பப்படுகிறது.