தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் அண்மையில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், வனவிலங்கு பாதுகாப்பில் தனது தந்தை முக்கிய பங்காற்றியுள்ளார் என்று கூறினார். அதனையடுத்து அவர், சிறு வயதில் இருந்தே நான் வனவிலங்கு ஆர்வலர். எனவே இந்த வனவிலங்கு பாதுகாப்பு துறை குறித்த ஆர்வமும் அக்கறையும் எனக்கு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வனவிலங்குகளை பாதுகாப்பதும், அவை பெருகுவதை உறுதி செய்வதும் நம் பாரம்பரிய அங்கமாக இருந்து வருகிறது என்றும் கூறினார்.
8 சிறுத்தைப்புலிகள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டது
தொடர்ந்து பேசிய அவர், வனவிலங்குகளை பொக்கிஷமாய் பாதுகாத்து, பராமரித்து, சிறந்த முறையில் வளர்த்து அடுத்த தலைமுறையினருக்கு அளிக்க வேண்டியது நம் கடமை என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் சிறுத்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தென் ஆப்ரிக்காவின் நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைப்புலிகள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டது. அதனை மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு பிரதமர் மோடி கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் வரும் சில மாதங்களில் மேலும் 14-16 சிறுத்தை புலிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்னும் தகவலை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.