அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் கணடனம் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் உள்ள சுவாமி நாராயண் மந்திர் வசன சன்ஸ்தா என்ற கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அக்கோவில் சுவர்களில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வெறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து இன்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷ்ங்கர், "அத்தகைய 'தீவிரவாதிகளுக்கு' இடம் கொடுக்கக் கூடாது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளது." என்று கூறியுள்ளார்.
சுஜிக்
'பிரிவினைவாத சக்திகளுக்கு இடமளிக்கக்கூடாது': ஜெய்சங்கர்
"செய்தியைப் பார்த்தேன். உங்களுக்கே தெரியும், நாங்கள் இதைப் பற்றி எவ்வளவு கவலைப்படுகிறோம் என்று. தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாத சக்திகளுக்கு இந்தியாவுக்கு வெளியேவும் இடமளிக்கக்கூடாது. நமது துணைத் தூதரகம்(அமெரிக்க) அரசு மற்றும் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறது என்று நம்புகிறோம்" என்று ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நெவார்க் காவல்துறை மற்றும் நீதித்துறை சிவில் உரிமைகள் பிரிவுக்கு தகவல் தெரிவித்த இந்து அமெரிக்கன் அறக்கட்டளை, இதை ஒரு வெறுப்பு குற்றமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.
இந்த சம்பத்தை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கடுமையாக கண்டித்ததுடன், குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.