கான்பூரில் 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகம்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கான்பூரில், அதானி வெடிமருந்து வளாகத்தை திறந்து வைத்தார். கான்பூர் வளாகம் தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து உற்பத்தி வளாகமாகும். மேலும், 2019 இல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட பாலகோட் வான்வழித் தாக்குதலின் மாவீரர்களை கவுரவிக்கும் விதமாக இருக்கும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மார்ச் மாதம் செயல்படவுள்ள இந்த வளாகம், 202 ஹெக்டேர் பில்டிங்கில், ஆயுதங்கள், வெடிமருந்துகள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகள் தயாரிக்கப்படும். இந்தத் திட்டம் மூலம், நேரடியாக 4,000 வேலை வாய்ப்புகளையும், மறைமுகமாக 20,000 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அதானி டிஃபென்ஸ் நிறுவனத்தின் CEO ஆஷிஷ் ராஜ்வன்ஷி தெரிவித்தார்.
அதானி குழுமம் கையழுத்திட்ட ஒப்பந்தங்கள்
அதானி குழுமம், ஐஐடி கான்பூரின் விண்வெளித் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளது மற்றும் தேவையின் அடிப்படையில் இந்திய ஆயுதப் படைகளுக்கு ஏவுகணைகளைத் தயாரிக்கும். கான்பூரை தெற்காசியாவின் மிகப்பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உற்பத்தி மையமாக மேம்படுத்த 2022 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (UPIDA) அதானி விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதானி குழுமத்தின் கரோபாலிஸ்டா சிஸ்டம்ஸ் லிமிடெட் (CSL) இஸ்ரேலிய நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸுடன் இணைந்து சுமார் ஒரு டஜன் வகையான துப்பாக்கிகளை தயாரிக்கும். Agneya Systems Limited (ASL) பல்கேரிய நிறுவனமான Armaco JSCO உடன் இணைந்து நாற்பது வகையான வெடிமருந்துகள் மற்றும் ராக்கெட் அமைப்புகளை தயாரிக்கும்.