
77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பகுதி 1
செய்தி முன்னோட்டம்
1947-ல், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது, மிகவும் ஏழ்மையான, வளர்ச்சியடையாத, பிறரைச் சார்ந்திருக்கிற, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நாடாக இருந்தது இந்தியா.
ஆனால், இன்று பல்வேறு துறைகளில் முன்னணியில் நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. உலக நாடுகளிடமிருந்து உதவி பெறும் நிலையில் இருந்து, பல்வேறு உலக நாடுகளுக்கும் உதவி செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது இந்தியா.
அரசியல், விவசாயம், மருத்துவம், தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளிக்க, 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது இந்தியா.
75 ஆண்டுகள், ஒவ்வொரு துறையிலும் இந்தியா எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது, யாரெல்லாம் இந்தியாவின் வளர்ச்சியில் பங்காற்றியிருக்கிறார்கள் என்பதன் தொகுப்பே இது.
இந்தியா
நேருவும், கம்யூனிச ஈர்ப்பும்:
இந்தியாவின் முதல் பிரதமாக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு, ரஷ்யாவின் பொது உடைமைக் கோட்பாட்டினால் ஈர்க்கப்பட்டவர். எனவே, ரஷ்யா மற்றும் பிற கம்யூனிஸ நாடுகள் பின்பற்றிய ஐந்தாண்டுத் திட்டத்தையே இந்தியாவிலும் பின்பற்றத் திட்டமிட்டார்.
1951-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வழங்கினார் ஜவஹர்லால் நேரு. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியத் துறைகளான விவசாயம், கல்வி, அறிவியல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம்.
இதனைத் தவிர்த்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் முழுவதுமாக களைய வேண்டிய தேவை அப்போது இருந்தது. எனவே, முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் அதனைக் களையவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடரும்....