Page Loader
இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் 
இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,056) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் 

எழுதியவர் Sindhuja SM
Aug 29, 2023
03:15 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஆகஸ்ட் 28) 70ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 23ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,509ஆக குறைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,056) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,929ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

djkqw 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

இந்தியாவில் ஆகஸ்ட் 27ஆம் தேதி 44 பாதிப்புகளும் ஆகஸ்ட் 26ஆம் தேதி 60 பாதிப்புகளும் ஆகஸ்ட் 25ஆம் தேதி 73 பாதிப்புகளும் ஆகஸ்ட் 23ஆம் தேதி 56 பாதிப்புகளும் ஆகஸ்ட் 22ஆம் தேதி 23 பாதிப்புகளும் ஆகஸ்ட் 21ஆம் தேதி 54 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,63,618 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் இதுவரை பேர் 6,910,780 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 694,229,081 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 666,204,445 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் 37,534 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்