இந்திய -பிரெஞ்சு உறவில் புதிய உச்சம்: 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 'ஸ்பெஷல் ஸ்ட்ரேடஜிக் பார்ட்னர்ஷிப்' அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று (பிப். 17, 2026) மும்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன் முடிவில் பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை' (Special Global Strategic Partnership) என்ற நிலைக்கு உயர்த்துவதாக இரு தலைவர்களும் அறிவித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Addressing the joint press meet with President Emmanuel Macron.@EmmanuelMacron https://t.co/FuX0qSUyw7
— Narendra Modi (@narendramodi) February 17, 2026
முக்கிய அறிவிப்புகள்
முக்கிய அறிவிப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள்
கர்நாடகாவின் வேமகலில் அமைக்கப்பட்டுள்ள ஏர்பஸ் மற்றும் டாடா நிறுவனங்களின் ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலையை இரு தலைவர்களும் காணொளி வாயிலாக திறந்து வைத்தனர். இங்கு உலகின் மிகச்சிறந்த H125 ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஹெலிகாப்டர் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்திற்கு பறக்கும் திறன் கொண்டது. சுகாதாரத் துறைக்கான இந்தோ-பிரெஞ்சு ஏஐ (AI) மையம், டிஜிட்டல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்தோ-பிரெஞ்சு மையம் மற்றும் வானூர்தித் துறைத் திறனுக்கான தேசிய சிறப்பு மையம் (National Centre of Excellence for Skilling in Aeronautics) ஆகிய மையங்களும் நிறுவ திட்டமிட்டுள்ளன. சுமார் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் திட்டத்தை அதிபர் மேக்ரான் வரவேற்றார்.
ஸ்டார்ட்-அப்
"புத்தாக்க ஆண்டு 2026"
"இன்று உலகம் ஒரு நிச்சயமற்ற நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியா-பிரான்ஸ் கூட்டணி உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு ஒரு சக்தியாக விளங்கும்" என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், 2026-ஆம் ஆண்டை 'இந்தியா - பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு' (India-France Year of Innovation) என அறிவித்த பிரதமர், இதன் மூலம் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் மாணவர்களிடையேயான தொடர்பு வலுப்படும் என்றார். கலாச்சார ரீதியாக, பிரான்சில் 'சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையம்' விரைவில் திறக்கப்படும் என்றும் லோத்தல் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத் திட்டத்தில் பிரான்ஸ் ஒத்துழைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.