சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா நாட்டின் 76வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கவுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 4, 10, 13 ஆகிய தேதிகளில் சுதந்திர தினவிழா ஒத்திகை நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த 3 நாட்களில் ஒத்திகை நிகழ்ச்சியானது காலை 6 மணி முதல் துவங்கி நடந்து முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மெரினா அருகே நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரையிலான சாலையிலும், ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, கொடிமரச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலை
போக்குவரத்தில் மாற்றம் குறித்த தகவல்
அதன்படி காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியே பாரிமுனை செல்லும் வாகனங்கள் அனைத்தும் சிவானந்த சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம் வழியே திருப்பிவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல், பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மூலம் காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வடக்கு கோட்டை சாலையில் சென்று முத்துசாமி சாலை, பல்லவன் சாலை, இவிஆர் சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை வழி சென்று காமராஜர் சாலையினை அடையலாம்.
தொடர்ந்து, அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சிக்னல் சந்திப்பு, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ். சாலை வழியே மாற்றி அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.