Loading...
வரலாற்றிலேயே முதல்முறை! நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவிப்பு

வரலாற்றிலேயே முதல்முறை! நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2026
11:16 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்றும், இதற்காகக் கொள்முதல் ஊக்கத்தொகையை அதிரடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

நெல்

நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு விவரங்கள்

சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 289-ம், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 150-ம் உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வினைத் தொடர்ந்து, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்துச் சன்ன ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ. 2,750-ம், பொது ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ. 2,600-ம் விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.

நெல்லுக்கு ரூ. 150 வரை உயர்த்தப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதன்முறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கரும்பு

கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ. 4,000 கிடைக்க நடவடிக்கை

சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 3,290.50 தொகையுடன், தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 709.50 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இதன் மூலம் கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வரை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு விவசாயிகள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT