NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை
    இந்தியா

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை

    எழுதியவர் Nivetha P
    March 10, 2023 | 02:22 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம்

    தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மட்டும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 200இடங்களில் காய்ச்சல் முகாம் நடக்கிறது. அந்தவகையில் சென்னை சைதாப்பேட்டை காய்ச்சல் தடுப்பு முகாமினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசியஅவர், இந்த முகாம்கள் மூலம் தமிழகத்தில் எத்தனைபேர் இந்த எச்3என்2 என்னும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறியலாம். அதன் பின்னர் இதனால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சமூக பரவல் தொற்றாக மாறும் முன்னரே இதனை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்

    எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கூறியுளளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார். ஒரு மாதத்துக்கு முன்னர் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 20 பேருக்கு மேலாக அதிகரித்துள்ளது. எனினும் இந்த வகை கொரோனா வைரஸால் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதனால் மக்கள் பதட்டம் அடைய தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, போன்றவற்றை பின்பற்றினால் நல்லது என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    கொரோனா
    சுகாதாரத் துறை
    சென்னை

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 10- மார்ச் 14 வானிலை அறிக்கை
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி ராமேஸ்வரம்
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்? கிரிக்கெட்

    கொரோனா

    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்தியா
    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம்
    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கோவிட் 19

    சுகாதாரத் துறை

    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா இந்தியா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா

    சென்னை

    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் போக்குவரத்து காவல்துறை
    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023