Page Loader
ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது
ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது

ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது

எழுதியவர் Nivetha P
Mar 17, 2023
03:26 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் மோடியின் அலுவலக உயரதிகாரி என்று கூறி காஷ்மீர் ஸ்ரீ நகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வந்தவர் குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு இந்தாண்டில் இருமுறை சென்றுள்ள இந்த நபர் தான் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து காஷ்மீர் மாநில நிர்வாகம் அங்குள்ள 5 நட்சத்திர விடுதியில் அவரை தங்க வைத்து உபசரித்ததோடு, குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பும் அளித்துள்ளது. அதன்படி முதல் முறை அங்கு சென்ற பொழுது, அவர் அம்மாநில அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் துணை ராணுவ படையினர் பாதுகாப்போடு அவர் பல இடங்களை சுற்றிப்பார்க்க சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ட்விட்டரில் பதிவு

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோசடி நபர்

குஜராத்தின் பாஜக பொதுசெயலாளர் திரு.பிரதீப் சிங் பகேலா உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ட்விட்டரில் இவர்களை பின்தொடர்பவர்களாக இருந்துள்ள நிலையில், அவர் இது தொடர்பான தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 2ம் தேதி மீண்டும் அவர் ஸ்ரீ நகருக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது சந்தேகமடைந்த மாவட்ட ஆட்சியர் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் பெயர் கிரண் பாய் பட்டேல் என்றும், அவர் குஜராத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த மோசடி நபர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் குறித்து தகவல் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப்போது தான் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.