NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 
    இந்தியா

    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023 | 06:48 pm 0 நிமிட வாசிப்பு
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது

    தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்னும் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்ணன்(53) என்பவர் நடத்தி வருகிறார், அவருடைய மகன் சூர்யப்பிரகாஷ்(23). இவர்கள் வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பு நாணையங்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா மற்றும் கும்பகோணம் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இன்று(மே.,4) அதிகாலை கண்ணன் வீட்டிற்குள் சிலை வாங்குவது போல் நுழைந்து அதிரடியாக சோதனையினை மேற்கொண்டனர்.

    பல கோடி மதிப்புள்ள சிலைகள், செப்பு நாணையங்கள் மீட்பு 

    இந்த சோதனையின்போது அவர்களுக்கு 1,000ஆண்டுகள் பழமையான தன்வந்திரி ஐம்பொன் சிலை, 1 1/4 அடிஉயரம் கொண்ட ராக்காயிஅம்மன் வெண்கலச்சிலை மற்றும் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த முக்கால் கிலோ எடைக்கொண்ட 2 செப்புநாணையங்கள் ஒரு காலச்சக்கரம் ஆகியன கிடைத்துள்ளது. இதனையடுத்து கண்ணன் மற்றும் அவரது மகன் கைதுச்செய்யப்பட்டனர். இதுகுறித்து சூரியப்பிரகாஷிடம் விசாரித்ததில், மன்னார்குடி திருமைக்கோட்டத்தில் அகஸ்தியர் கோயில் கட்டுமான பணி நடந்து வருகிறது. அந்த கோயிலை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து சிலைகள் மற்றும் செப்புநாணையங்கள் வாங்கி விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்துருப்பதாக கூறியுள்ளார். இதன் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது அந்த மாரியப்பனிடன் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை
    திருச்சி

    தமிழ்நாடு

    அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்!  சேலம்
    சரக்கு சாப்பிட்டால் சை டிஷ் சாப்பிடுங்க! மனோபாலா இறுதி ஊர்வலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்  கோலிவுட்
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  சிபிசிஐடி
    ரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் இப்படிதான் செலுத்த வேண்டும்! மின்வாரியம் புதிய நடவடிக்கை  இந்தியா

    காவல்துறை

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  இந்தியா
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு  சிபிசிஐடி
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை  கோவை
    நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்!  தமிழ்நாடு

    காவல்துறை

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman ஏஆர் ரஹ்மான்
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து  சென்னை
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது  கேரளா

    திருச்சி

    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது  பள்ளி மாணவர்கள்
    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது  கேரளா
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்  தமிழ்நாடு
    சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்  கோவில் திருவிழாக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023