LOADING...
மழை வரபோகுதே! சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு (pc: The Hindu)

மழை வரபோகுதே! சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2026
05:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல சுழற்சி காரணமாக, அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் உட்பட வங்கக்கடல் பகுதிகளிலும் பருவமழை தீவிரமாக முன்னேறியுள்ளது. தமிழகத்தில் நேற்றைய தினம் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 165 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கனமழை

கனமழை எச்சரிக்கை

வளிமண்டல சுழற்சி மற்றும் பருவமழை தீவிரம் காரணமாக, தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 18 மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, நெல்லை மலைப்பகுதிகள், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement