
கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி
செய்தி முன்னோட்டம்
நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி கிருத்திகா(26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து 2 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவந்த கிருத்திகாவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன்(29) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி போனில்பேசி கொள்வதோடு, நேரிலும் சந்தித்து நெருங்கி பழகி வந்துள்ளார்கள்.
இதுகுறித்து கிருத்திகா பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் தங்கள் மகளின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனை கிருஷ்ணனிடம் கிருத்திகா கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவுசெய்து, கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரம்
விஷம் அருந்தியதில் இளம்பெண் பலி
கோவைக்கு வந்த அந்த கள்ளக்காதல் ஜோடி, தாங்கள் கணவன் மனைவி என்று கூறி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்கள்.
அங்கு அவர்கள் இருவரும் தனிமையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
பின்னர் அவர்களை தங்கள் உறவினர்கள் ஒன்றாக வாழ விட மாட்டார்கள் என எண்ணிய இருவரும் விஷம் வாங்கி லாட்ஜின் ரூமிலேயே குடித்துள்ளனர்.
விஷம் குடித்து மயக்கமடைந்த நிலையில் இவர்கள் ரூமில் இருக்க, ரூம் வாடகை வாங்க வந்த லாட்ஜ் மேனஜர் இவர்கள் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் அவர்களை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.