
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அண்மையில் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், மதுரை மாவட்டத்தில் ஊக்கத்தொகை கோரி பால் உற்பத்தியாளர்கள் மார்ச் 11ம்தேதி பால் நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லிட்டருக்கு 7ரூ. வீதம் உயர்த்தக்கோரி நடந்த இந்த போராட்டம் குறித்து உசிலம்பட்டி பால்சேகரிப்பு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஆவின்பொதுமேலாளர் சாந்தி, துணைபதிவாளர் செல்வம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் பெரிய கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
எனினும் ஊக்கத்தொகை குறித்து இன்னமும் எவ்விதஅறிவிப்பும் வரவில்லை என்பதால் மீண்டும் மார்ச் 17ம் தேதி மாநில சங்கங்களுடன் இணைந்து பால் நிறுத்தபோராட்டத்துடன், கறவை மாடுகளை கொண்டு சாலைமறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் சாலை மறியல் போராட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிடில் மார்ச் 17-ம் தேதி முதல் கறவை மாடுகளுடன் சாலை மறியல்: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் https://t.co/MIXwgOqXWc
— Dinakaran (@DinakaranNews) March 14, 2023