Page Loader
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம் 
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம் 

எழுதியவர் Nivetha P
Jun 19, 2023
04:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நிர்வாக வசதி காரணமாக பணியிடைமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நிகழ்வாகும். அதன்படி, தற்போது சில ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, நிலநிர்வாகத்துறை ஆணையர் பீலாராஜேஷ் அவர்கள் எரிசக்தித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எரிசக்தித்துறை செயலாளராக இருந்த ரமேஷ்சந்த் மீனா சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப்சிங் வணிகத்துறையின் இணை-ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனர் விஜயராணி நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி நிர்வாக இயக்குனர் ஆசியா மரியம் சிறுபான்மை நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனராக ஊரக வளர்ச்சி இணை-செயலாளர் சந்திரசேகர் சஹாமுரி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post