கண்ணுக்குத் தெரியாத தூரத்திலும் இலக்கை வீழ்த்துவோம்; வாயுசக்தி போர்ப்பயிற்சிக்கு முன் இந்திய விமானப்படை S-400 ஏவுகணை வீடியோ வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இந்திய விமானப்படை, ரஷ்ய தயாரிப்பான அதிநவீன S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு செயல்படும் முதல் வீடியோ காட்சிகளை இன்று (பிப்ரவரி 26, 2026) வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானில் நாளை நடைபெறவுள்ள வாயுசக்தி போர் பயிற்சியின் முன்னோட்டமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் எதிரி நாட்டு விமானங்களை ரேடார் மூலம் கண்டறிந்து, ஏவுகணையைச் செலுத்தி அழிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. "எதிரிகள் எட்டாத தூரத்தில் இருக்கலாம், ஆனால் எங்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது" என்ற சக்திவாய்ந்த வாசகத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்துார் மற்றும் உலக சாதனை
கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில் S-400 ஏவுகணை அமைப்பு ஆற்றிய முக்கியப் பங்கை இந்த வீடியோ நினைவுபடுத்துகிறது. ராணுவ வரலாற்றிலேயே மிக நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை வீழ்த்திய சாதனையை இந்த ஏவுகணை நிகழ்த்தியுள்ளதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 300 கிலோமீட்டர் ஆழத்தில் பறந்து கொண்டிருந்த அந்நாட்டின் உளவு விமானம் மற்றும் போர் விமானங்களை இந்தியாவிலிருந்தே ஏவப்பட்ட S-400 ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன.
விளக்கம்
விமானப்படை தளபதியின் அதிரடி விளக்கம்
இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் ஏற்கனவே இது குறித்துப் பேசுகையில், ஆபரேஷன் சிந்துாரின் போது பாகிஸ்தானின் சுமார் 12 விமானங்கள் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, பாகிஸ்தான் விமானப்படையின் சிக்னல் உளவு விமானம் மற்றும் எஃப்-16, ஜேஎஃப்-17 ரக அதிநவீன போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள்ளிருந்தே ஏவப்பட்ட ஏவுகணைகளால் வீழ்த்தப்பட்டன. 300 கிமீ தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியதற்கான தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வியூக முக்கியத்துவம்
S-400 அமைப்பின் வியூக முக்கியத்துவம்
S-400 ஏவுகணை அமைப்பானது வான் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் பலத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. இந்த அமைப்பு செயல்பாட்டிற்கு வந்த பிறகு, பாகிஸ்தான் தனது சொந்த எல்லைக்குள் கூட ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சுதந்திரமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்திலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் இந்த நீண்ட தூர ஏவுகணைகள், எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை அவை இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு முன்பே அழிக்கும் திறன் கொண்டவை. இந்த வீடியோ வெளியீடு இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Indian Air Force: Infallible, Impervious and Precise
— Indian Air Force (@IAF_MCC) February 26, 2026
1 day to go.
The Indian Air Force has successfully validated all operational parameters during the Full Dress Rehearsal for #Vayushakti26 at Pokhran, all targets effectively neutralised.
All Air Warriors now stand fully… pic.twitter.com/j7ZWmOYYb1