ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது?
செய்தி முன்னோட்டம்
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வுதியம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 26-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வுதியமானது எப்படி கண்கிடப்படுகிறது என்பது குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம்.
2014 ஆகஸ்ட் 31 அல்லது அதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை கணக்கிட, அவர்களது பணிக் காலத்தின் கடைசி 12 மாதங்கள் பெற்ற சராசரி ஊதியம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால், 2014 செப்டம்பர் 1 அல்லது அதற்கு பின்பு ஒய்வு பெறும் ஊழியர்களுகளின் ஓய்வூதியத்தைக் கணக்கிட, அவர்களது பணிக்காலத்தின் கடைசி 60 மாதங்கள் பெற்ற சராசரி ஊதியம் கணக்கில் கொள்ளப்பட்டு வருகிறது.
EPFO
கவனிக்க வேண்டிய விஷயம்:
தற்போது ஓய்வூதியத்தை கணக்கீடு செய்ய கீழ்கண்ட சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
= (கடைசி 60 மாதங்களில் பெற்ற சராசரி ஊதியம் x மொத்த பணிக்காலம்) / 70
மேற்கூறிய சூத்திரத்தில் சராசரி ஊதியம் என்பது அடிப்படை ஊதியமத்தை (Basic Salary) மட்டுமே கணக்கில் கொண்டு கணக்கிடப்படும்.
ஆனால், அதிக ஓய்வூதியம் பெற விரும்பி விண்ணப்பிப்பவர்களுக்கு, அவர்களின் மொத்த ஊதியமும் கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள், ஓய்விற்கு பின்பு பெரும் வைப்பு நிதித் தொகை குறைவாக இருக்கும் என்பதையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.
மேலும், விரைவாகவே ஓய்வு பெற விரும்புபவர்கள் அதிக ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்காமல் இருப்பது நல்லது.