தேர்தல் 2024: உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியின் முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சி சார்பிலும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார். அங்கே அவர் வாகன பேரணியில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்க உள்ளார். தென்காசி ஆசாத் நகர் பகுதியில் தொடங்கும் பேரணி, அங்கிருந்து பழைய பஸ் நிலையம் வரையில் வரை நடைபெறும். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு செல்கிறார் அமித்ஷா. முன்னதாக அவர் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, அவர் தென்காசிக்கு செல்கிறார்.