ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம்
ஞானவாபி மசூதிக்குள் சீல் வைக்கப்பட்ட பகுதியான 'வியாஸ் கா தெகானா'விற்குள் இந்து பக்தர்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, பக்தர்களால் செய்யப்படும் 'பூஜை'க்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அதற்கு ஒரு பூஜாரியை பரிந்துரைக்குமாறு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை வரவேற்பதாக இந்து தரப்பு வழக்கறிஞர் கூறிய நிலையில், எதிர்தரப்பு வழக்கறிஞர், வாரணாசி நீதிமன்ற உத்தரவால் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மேல் நீதிமன்றத்திற்கு செல்ல விருப்பம் உள்ளது என்று கூறினார்.