LOADING...
அறிவாலயத்தை உலுக்கும் 'நிழல்' மனிதர்கள்: ஸ்டாலினுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட தரைமட்ட உண்மைகள்!
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் தோல்வியின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள்

அறிவாலயத்தை உலுக்கும் 'நிழல்' மனிதர்கள்: ஸ்டாலினுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட தரைமட்ட உண்மைகள்!

எழுதியவர் Vasuki
May 05, 2026
02:11 pm

செய்தி முன்னோட்டம்

2026 சட்டமன்றத் தேர்தலில்திமுகவின் வீழ்ச்சிக்கு, கட்சித் தலைமைக்கும் தரைமட்ட யதார்த்தத்திற்கும் இடையே நிலவிய மிகப்பெரிய தகவல் இடைவெளி (Information Gap) முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினைச் சுற்றியிருந்த அதிகாரிகள் மற்றும் உறவினர்களின் தரவு ஆய்வு நிறுவனம், தவெக-வின் எழுச்சி மற்றும் மக்கள் அதிருப்தி குறித்த உண்மைகளை மறைத்து "போலி நம்பிக்கையை" அளித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் பின்னடைவைச் சந்திக்கும் வரை, அவருக்குச் சாதகமான அறிக்கைகளே வழங்கப்பட்டதாகக் கட்சித் தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஸ்டாலினுக்கு விரித்த அன்பு வலை

மறைக்கப்பட்ட உண்மைகள்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தற்போது அறிவாலய வட்டாரங்களில் கசியும் தகவல்கள் அதிர்ச்சியை வரவழைப்பதாக உள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கள நிலவரங்கள் குறித்துத் தவறான முன்னோட்டம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் அசுர வளர்ச்சியைப் பற்றியும், மக்கள் மத்தியில் திமுக பற்றி நிலவிய அதிருப்தியைப் பற்றியும் பல மூத்த IAS அதிகாரிகள் மற்றும் கட்சியின் சில முக்கியத் தலைவர்கள் மறைத்ததாகத் தெரிகிறது. எல்லாம் சரியாக இருக்கிறது, மீண்டும் ஆட்சி உறுதி, கொளத்தூரில் சாதனை வெற்றி எனச் சுற்றியிருந்தவர்கள் கொடுத்த போலி நம்பிக்கையே, வியூகங்களை வகுப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கட்சித் தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

உறவினர்களின் நிறுவனம்

கோட்டை விட்ட டேட்டா கணக்குகள்

இந்தத் தோல்வியில் மிக முக்கியமான விமர்சனம், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நடத்தி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மீது உள்ளது. களத்தில் மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை துல்லியமாகக் கணிக்க வேண்டிய இந்த களஆய்வு நிறுவனம், தலைமையைத் திருப்திப்படுத்துவதற்காகவே பாசிட்டிவ் அறிக்கைகளைதயார் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. விஜய்யின் தவெக கட்சி இளைஞர்கள், பெண்களிடையே ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை இந்த நிறுவனம் கவனிக்க தவறியதா அல்லது தெரிந்தும் மறைத்ததா என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஸ்டாலினுக்கு தவெக-வின் வளர்ச்சி குறித்துத் தெரிந்திருந்தாலும், அது திமுக-வின் வாக்கு வங்கியை இந்த அளவிற்கு சிதைக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. முதல்வருக்கு அளிக்கப்பட்ட உளவு அறிக்கைகள் அனைத்தும் தவெக-வை ஒரு சிறிய சக்தியாகவே சித்தரித்திருந்தன.

Advertisement

தலைநகர் சென்னையில் தோல்வி

கொளத்தூர் அதிர்ச்சி

சென்னையில் திமுக சந்தித்த வீழ்ச்சிக்கு, முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகள் மட்டுமே காரணமல்ல; அவர்கள் தலைமையிடம் கொடுத்த தவறான ரிப்போர்ட் தான் காரணம் எனத் தெரிகிறது. அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள, உட்கட்சிப் பூசல்களையும், மக்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பையும் மூடி மறைத்துவிட்டனர். குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்கும் நிலை வரும் என்பதை முதல்வரது நெருங்கிய வட்டாரம் கடைசி வரை அவரிடம் சொல்லவே இல்லை. வாக்கு எண்ணும் மையத்தில் முடிவுகள் வரத்தொடங்கிய போதுதான், தலைமைக்கே உண்மை நிலை உறைக்கத் தொடங்கியது.

Advertisement

உட்கட்சிப் பூசல்

மூத்த முன்னோடிகள் வருத்தம்

அதிகாரிகளுடனான நெருக்கம், சில குறிப்பிட்ட அதிகார மையங்களின் ஆதிக்கம் ஆகியவை முதலமைச்சரை தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக கழகத்தின் மூத்த தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். நிஜமான தொண்டர்களின் குரல், தலைவருக்கு கேட்கவே இல்லை; மாறாக, அதிகாரிகளின் புகழ்ச்சி மட்டுமே ஸ்டாலின் காதுகளுக்குச் சென்றது என மாவட்டச் செயலாளர் ஒருவர் கொந்தளித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் தலைமை மீதான அதிருப்தி, திமுக-வின் எதிர்காலத்திற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. தன்னைச் சுற்றியுள்ள துதிபாடும் கூட்டத்தை அகற்றிவிட்டு, உண்மை நிலவரத்தை ஆராய்ந்தால் மட்டுமே திமுக கழகம் மீண்டும் பலம் பெற முடியும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement