Loading...
மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! நாளை 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
நாளை 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! நாளை 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
05:10 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 15) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை

சென்னையில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர் 14) மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக 34-35° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26° செல்சியஸும் நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16 மற்றும் 17

டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை

வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தொடரும் மழை

செப்டம்பர் 18 முதல் 20 வரை தொடரும் மழை நீடிப்பு

செப்டம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரையிலான நாட்களில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.

மேலும், செப்டம்பர் 19 ஆம் தேதி திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும், செப்டம்பர் 20 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும்.

ADVERTISEMENT