Loading...
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்
இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2026
05:07 pm

செய்தி முன்னோட்டம்

தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 15) கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

மழை நிலவரம்

நாளை மழை நிலவரம்

நாளை (செப்டம்பர் 16) கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை

சென்னை மற்றும் வெப்பநிலை நிலவரம்

செப்டம்பர் 19 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT