Page Loader
கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற  நபர் கைது
கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த தனது காதலியை சுட்டு கொலை செய்த காதலன்

கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது

எழுதியவர் Sindhuja SM
Apr 06, 2023
04:58 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹரியானா மாநிலம் குமாட் கிராமத்தில் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் எலும்புக்கூட்டை பிவானி குற்றப் புலனாய்வு அமைப்பு(CIA) செவ்வாய்கிழமை கண்டுபிடித்தது. உயிரிழந்த நீலம் (23) என்ற பெண் தனது காதலனை திருமணம் செய்வதற்காக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாகவும், அவரது காதலன் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவரது காதலன் சுனிலும் ஒப்புக்கொண்டுள்ளார். கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த தனது காதலியை சுட்டு கொலை செய்த சுனில், காதலியின் உடலை தனது பண்ணை வீட்டிலேயே புதைத்துள்ளார். இது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்தியா

காதலியை கொலை செய்து தன் பண்ணை வீட்டில் புதைத்த காதலன்

நீலத்தின் குடும்பத்தினர் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜை சந்தித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது. நீலத்தின் சகோதரி கடந்த ஆண்டு தன் சகோதரியை காணவில்லை என்று காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். அந்த வழக்கின் மூலம், நீலம் கனடாவிற்கு சென்றதும், அதன் பிறகு ஜனவரி 2022இல் சுனிலை திருமணம் செய்து கொள்ள இந்தியாவுக்கு திரும்பி வந்ததும் தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தியதை அடுத்து, தன் காதலியை கொலை செய்ததை சுனில் ஒப்புக்கொண்டார். பிவானி CIA-2 போலீஸார் செவ்வாயன்று சுனிலின் பண்ணை வீட்டில் இருந்து எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். குற்றம் சாட்டப்பட்ட சுனில் மீது கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.