Page Loader
அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர்
பாதிக்கப்பட்டவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர்

எழுதியவர் Sindhuja SM
Mar 30, 2023
06:51 pm

செய்தி முன்னோட்டம்

குருகிராமில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது ஊழியர் ஒருவர், புதன்கிழமை(மார் 29) அலுவலகத்தில் நாற்காலி தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறை அடுத்து, அவரது சக ஊழியரால் சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் விஷால் என்ற நபர் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் செக்டார் 9ல் உள்ள ஃபிரோஸ் காந்தி காலனியில் வசிப்பவர் ஆவார்.

இந்தியா

அமன், கொலை முயற்சியின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

குற்றம் சாட்டப்பட்டவர் அமன் ஜாங்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) வீரேந்தர் விஜ் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நாற்காலி தொடர்பாக இரண்டு முறை தகராறு நடந்திருக்கிறது. அதனால் கோபமடைந்த அமன் ஜாங்ரா, விஷால் அலுவலகத்தை விட்டு வெளியேறும் நேரம் பார்த்து, அவரை பின்னால் இருந்து துப்பாக்கியால் சுட்டார் என்று கூறப்படுகிறது.