Page Loader
கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா?
ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வருகைக்காக காத்திருக்கும் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை

கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2023
09:35 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429ச.மீ.,பரப்பளவில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையினை தமிழக அரசு கட்டியுள்ளது. இதன்படி இந்த மருத்துவமனையின் 'ஏ'பிளாக்கில் ரூ.78கோடியில் 16,736 பரப்பளவில் நிர்வாக கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 'பி'பிளாக்கில் ரூ.78கோடியில் 18,725 பரப்பளவில் அறுவை சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, 'சி'பிளாக்கில் 15,968 பரப்பளவில் ரூ.74கோடியில் கதிரியக்க நோய்க்கான பிரிவு வார்டுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

card 2

குடியரசு தலைவரின் வருகைக்காக காத்திருப்பு!

இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏப்ரல் 8ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களை நேரில் டெல்லி சென்று சந்தித்து மருத்துவமனையினை திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஜூன் 5ம் தேதி இதன் திறப்புவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, விழாவிற்கான ஏற்பாடுகள் செய்த நிலையில், ஜனாதிபதி அந்த தேதியில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருந்ததால், இந்த நிகழ்வானது ரத்தானது. தொடர்ந்து, மருத்துவமனை வரும் ஜூன்15ம் தேதி திறக்கப்படும் என்று செய்திகள் தெரிவித்த நிலையில், தற்போது வரை ஜனாதிபதி தமிழ்நாட்டிற்கு வருவது குறித்து நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த முறையும் ஜனாதிபதி வரவில்லை என்றால், கிண்டி மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் கூறப்படுகிறது.