NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    Apr 22, 2023
    08:00 am
    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    ரமலான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தனது ரம்ஜான் வாழ்த்துக்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில் அவர் கூறியுள்ளதாவது, மனிதநேயம் போற்றும் ரம்ஜான் திருநாள் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன். அன்பை அடக்க உணர்வை, எளிமையை போதித்த அண்ணல் நபிகள் பெருமான், 'அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்பொழுது நீ மட்டும் சாப்பிடாதே. உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியினை ஏழைகளுக்கு கொடு' என போதித்து, மானுடன் அனைத்தும் பேரன்பால் பிணைக்கப்பட வேண்டியது என்பதை எடுத்து காட்டியவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    2/2

    இன்பமும், நலமும் நிறைந்த இனிமை பெருகட்டும்

    மேலும், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் உன்னத லட்சியங்களை உலகிற்கு தனது ஈகையாக வழங்கி சென்றவர் அண்ணல் நபிகள் பெருமான். திராவிட முன்னேற்ற கழகம் நமது திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமான் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றி தனது பயணத்தினை தொடருகிறது, என்றென்றும் தொடரும். நபிகள் பெருமான் போதித்த நெறி வழி நின்று, நோன்பு கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு ரமலான் திருநாளை கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இஸ்லாமிய பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்த இனிமை பெருகட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு

    பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது  திருநெல்வேலி
    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  திமுக
    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது  சென்னை
    தமிழகத்தில் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை அறிக்கை  புதுச்சேரி

    மு.க ஸ்டாலின்

    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  சென்னை
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்  மத்திய அரசு
    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023