NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா திங்கட்கிழமை தாக்கல் இல்லை; மத்திய அரசு திடீர் முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா திங்கட்கிழமை தாக்கல் இல்லை; மத்திய அரசு திடீர் முடிவு
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் இல்லை; மத்திய அரசு முடிவு

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா திங்கட்கிழமை தாக்கல் இல்லை; மத்திய அரசு திடீர் முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 15, 2024
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா), 2024 ஆகியவற்றிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

    முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, 191 நாட்களில் 18,626 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையைத் தயாரித்து, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பலன்களை எடுத்துக்காட்டியதன் அடிப்படையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

    கொள்கை ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், வாக்காளர்களின் சோர்வைக் குறைக்கவும், தேர்தல் பங்கேற்பை அதிகரிக்கவும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களை அறிக்கை பரிந்துரைக்கிறது.

    மத்திய அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர்.

    சாத்தியமற்றது

    நடைமுறை சாத்தியமற்றது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

    இந்த முன்மொழிவு நடைமுறைக்கு மாறானது மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதாவை தாக்கல் செய்வது சாத்தியமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், திங்கட்கிழமைக்கான (டிசம்பர் 16) திருத்தப்பட்ட பார்லிமென்ட் அலுவல் பட்டியலில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா சேர்க்கப்படவில்லை.

    ஆனால் கோவா மாநில மசோதா, 2024ன் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலின பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்துவதைக் குறிப்பிடுகிறது.

    கோவாவின் சட்டப் பேரவையில், அரசியலமைப்பின் 332 வது பிரிவின்படி பழங்குடியினரின் சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒரே நாடு ஒரே தேர்தல்
    மத்திய அரசு
    இந்தியா
    மக்களவை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஒரே நாடு ஒரே தேர்தல்

    ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஸ்டாலின்
    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு குடியரசு தலைவர்
    'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல் சட்டமன்றம்
    ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; குளிர்கால கூட்டத்தொடரில் பில் நிறைவேற்றப்படும் அமைச்சரவை

    மத்திய அரசு

    வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15 வரை நீட்டிப்பு; மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு வருமான வரி அறிவிப்பு
    100 நாள் வேலைத்திட்ட நாட்கள் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல் இந்தியா
    2025இல் சென்சஸ் கணக்கெடுப்பு தொடக்கம்; 2028க்குள் எம்பி தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டம் மக்களவை
    அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரிப்பு; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி

    இந்தியா

    அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் பேடிஎம்மில் பார்க்கலாம்; எப்படி தெரியுமா? பேடிஎம்
    இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகிறது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்;  ₹15,000 கோடி நிதி திரட்ட திட்டம் ஐபிஓ
    31 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் என மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி; சிக்கியது எப்படி? உத்தரப்பிரதேசம்
    தொடர் சரிவிற்கு பிறகு இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு; ஆர்பிஐ தகவல் ஆர்பிஐ

    மக்களவை

    2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் தேர்தல்
    6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி  தேர்தல் ஆணையம்
    OPS vs OPS: ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 6 பேர் வேட்புமனு தாக்கல் ஓ.பன்னீர் செல்வம்
    ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025