Loading...
"தனியார் மயமாகிறது குலசேகரன்பட்டினம் ஏவுதளம்" - தனியாருக்கு மத்திய அரசு அழைப்பு!
குலசேகரன்பட்டினம் ஏவுதளம்

"தனியார் மயமாகிறது குலசேகரன்பட்டினம் ஏவுதளம்" - தனியாருக்கு மத்திய அரசு அழைப்பு!

எழுதியவர் Vasuki
Aug 09, 2026
11:47 am

செய்தி முன்னோட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கி வரும் இஸ்ரோவின் முதன்மை ஏவுதளத்தைத் தொடர்ந்து, நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள புவியியல் அமைப்பு காரணமாக, இங்கிருந்து குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தி சிறிய வகை ராக்கெட்டுகளை மிக எளிதாக விண்ணில் செலுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

பிரமாண்ட வளாகம்:

துரித வளர்ச்சி:

குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளக் கட்டிடம் மற்றும் பராமரிப்புப் பணிமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வகையிலான பிரமாண்ட ஹெலிபேட் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் 5 அடுக்குகளாக ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லும் வாகன மாற்றத்திற்காகக் கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரம் மற்றும் காரங்காடு ஆகிய இடங்களில் உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தனியார்மயம்

மத்திய அரசின் நகர்வு

ரூ.986 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய ராக்கெட் ஏவுதளத்தின் முழுமையான நிர்வாகம், இயக்கம் மற்றும் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும், பராமரிப்புப் பணிகளைத் திறம்பட நடத்துவதற்கும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து, விரைவில் ஏவுதளத்தை முழு செயல்பாட்டிற்குக் கொண்டுவர இஸ்ரோ அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT