
புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
சென்னையினை சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்னும் வணிக நிறுவனம் ஹான்ஸ் என்னும் போதை பொருள் சார்ந்த பொருளின் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் அளித்த மனுவில், ஹான்ஸ் பொருளினை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறோம்.
இந்நிலையில் பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ், இறக்குமதியினை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கூடாது என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையினை இன்று(மே.,11) சென்னை உயர் நீதிமன்றம் மேற்கொண்டது.
இந்த மனுவினை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்கள் விசாரித்தார்.
ஹான்ஸ்
அரசு தடை விதித்தது மிகவும் நியாயமானது - உயர்நீதிமன்றம்
இந்த விசாரணையின் போது, எந்தவொரு புகையிலை தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என அரசு கண்டறியப்பட்டால் நிச்சயம் தடை விதிக்கலாம்.
ஹான்ஸில் 1.8% நிக்கோட்டின் உள்ளது. இது மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு என்பதால் இதனை அனுமதிக்க முடியாது.
தொழில் மேற்கொள்ள அடிப்படை உரிமை என்பது இருந்தாலும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
எனவே மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இது போன்ற புகையிலைகளுக்கு அரசு தடை விதிக்கலாம்.
ஹான்ஸ் பொருள்களுக்கு அரசு தடை விதித்தது மிகவும் நியாயமான ஒன்று என்று கூறி இவ்வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.