Page Loader
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்

எழுதியவர் Nivetha P
Mar 17, 2023
02:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1317 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் இந்தியாவில் கேரளா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி உயரும்போதெல்லாம் தங்க கடத்தல் கும்பல் அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில் தங்க கடத்தலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் குறித்து முன்னாள் IRS அதிகாரி சரவணகுமார் அண்மையில் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, தங்க கடத்தலில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்

இந்தியாவில் தங்கத்திற்கு பற்றாக்குறை என்பதால் கடத்தல் அதிகரிப்பு

அதனை தொடர்ந்து பேசிய அவர், அதே போல் ஒரு முறை தங்க கடத்தலில் ஈடுபட்டு விட்டால் அதிலிருந்து வெளியில் வர விரும்ப மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். பின்னர் பேசிய அவர், சிறை தண்டனையைவிட அதன் பின்னர் அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பு எனபதும் கேள்விக்குறியாகி விடும். இந்தியாவில் தங்கம் பற்றாக்குறை என்பதால், தங்கக்கடத்தலில் அதிக லாபம் கிடைப்பதால் இத்தொழிலை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். அதனால் கஸ்டம்ஸ் மற்றும் காவல்துறையில் ஒரு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.