
இன்றைய தங்க விலை நிலவரம்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் இரண்டு நாட்களாக தங்க விலை குறைந்து வந்திருந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை ஏற்றம் கண்டிருக்கிறது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,665-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து ரூ.6,180-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.49,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...#newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/eF8S38kPqf
— News Cafe Tamil (@newscafetamil) May 24, 2023