Page Loader
தெலுங்கானாவில் 18 வயது பெண் தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்-கடத்தியவரையே மணந்த இளம்பெண்
கடத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த 18 வயது இளம்பெண் ஷாலினி

தெலுங்கானாவில் 18 வயது பெண் தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்-கடத்தியவரையே மணந்த இளம்பெண்

எழுதியவர் Nivetha P
Dec 25, 2022
03:12 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஷாலினி. இவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு கடத்தல் கும்பல் காரில் வந்து ஷாலினி தந்தையை தள்ளிவிட்டு, ஷாலினியை கடத்தி சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க அப்பெண்ணின் தந்தை முயற்சித்தார், ஆனால் அவரால் முடியவில்லை. இதனையடுத்து போலீசில் இது குறித்து அவர் புகார் ஒன்றினை அளித்தார். போலீசாரும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஜான் என்பவரது மீது சந்தேகம் உள்ளதாக அப்பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்கையில், ஏற்கனவே அந்த ஜானுடன் ஷாலினி வீட்டை விட்டு சென்றதும்,

இணையத்தில் வைரலாகும் வீடியோ

'என்னை யாரும் கடத்தவில்லை' - கடத்தப்பட்ட பெண் வீடியோ பதிவு

அப்போது அப்பெண் மைனர் என்ற காரணத்தினால் அவரை மீட்டு போலீசார் வீட்டில் ஒப்படைத்து விட்டு, ஜான் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தற்போது அப்பெண்ணிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் அவர் கடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை அமைக்கப்பட்டு ஒருபக்கம் போலீஸ் தேடி வரும் நிலையில், 'என்னை யாரும் கடத்தவில்லை. நானும் ஜானும் 4 வருடங்களாக காதலித்து வருகிறோம், என்னை அழைத்து செல்லவே அவர் அங்கு வந்துள்ளார். முகமூடி அணிந்திருந்ததால் எனக்கு அடையாளம் தெரியவில்லை. இப்பொழுது என் விருப்பப்படி தான் அவருடன் இருக்கிறேன். நாங்கள் திருமணமும் செய்து கொண்டோம்" என்று ஷாலினி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இணையத்தில் பரவும் வைரல் வீடியோ