LOADING...
கேஸ் சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம், Address proof தேவையே இல்லை
இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம்

கேஸ் சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம், Address proof தேவையே இல்லை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2026
12:07 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோக முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இனி சாதாரண பொதுமக்கள் 5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டர்களை எவ்வித முகவரிச் சான்றும் இன்றி எளிதாகப் பெற முடியும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறை குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ளது. பொதுவாக எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் கார்டு அல்லது உள்ளூர் முகவரிச் சான்று சமர்ப்பிப்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், தற்போது, 5 கிலோ சிலிண்டர் பெற எவ்வித முகவரிச் சான்றும் தேவையில்லை. வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளச் சான்றை மட்டும் சமர்ப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு ஏஜென்சிகளிடம் இருந்து இந்த சிலிண்டர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

விநியோக விரிவாக்கம்

விநியோக விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு

தற்போது இந்த 5 கிலோ சிலிண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிவாயு ஏஜென்சிகளில் மட்டுமே கிடைக்கின்றன. வரும் காலங்களில் பெட்ரோல் பங்க்குகள் மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனைக் கடைகளிலும் இவை கிடைக்க வழிவகை செய்யப்படவுள்ளது. தரமான மற்றும் பாதுகாப்பான சிலிண்டர்களை மக்கள் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், சட்டவிரோத ரீஃபில்லிங் முறையைத் தடுக்கவும் இந்த முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் முதல்முறை சிலிண்டர் வாங்கும்போது மட்டும் அதற்கான டெபாசிட் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பிறகு, காலி சிலிண்டரை ஒப்படைத்துவிட்டு புதிய சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement