NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 
    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 
    இந்தியா

    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    April 20, 2023 | 03:40 pm 0 நிமிட வாசிப்பு
    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 
    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம்

    தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவன்னூர், பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு 900 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ தன்மை கொண்டது. இத்தகைய சிறப்புமிக்க கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடும் அண்மையில் வழங்கப்பட்டது. இந்நிலையில் பயிரிடப்பட்ட 120 நாட்களில் மலைப்பூண்டு அறுவடைக்கு வரவுள்ளது. இங்கு விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. இதன் காரத்தன்மையும் அதிகமுள்ளது. புகைமூட்டம் செய்து இப்பூண்டினை பதப்படுத்தி வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    அறுவடை செய்த பச்சை பூண்டு ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை 

    இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். சீதோஷண நிலை மாற்றம், மழையால் விளைச்சல் 70 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது அறுவடை செய்த பச்சை பூண்டு ஒரு கிலோ ரூ.70க்கும், புகை மூட்டம் செய்யப்பட்ட பூண்டு ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது. விளைச்சல் குறைந்தாலும், போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து மன்னவன்னூர் விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு மலைப்பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. புகை மூட்டம் செய்து பதப்படுத்திய பூண்டு ஒரு கிலோ ரூ.450 வரை விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    கொடைக்கானல்

    தமிழ்நாடு

    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  சேகர் பாபு
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  சேகர் பாபு
    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி

    கொடைக்கானல்

    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை சுற்றுலாத்துறை
    கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது  காங்கிரஸ்
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  தமிழ்நாடு
    கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு  வனத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023