Page Loader
சென்னை எண்ணூர் ஆழ் கடல் குழாயில் அம்மோனியா வாயு கசிவு: 30க்கும் மேற்பட்டோர் மயக்கம் 

சென்னை எண்ணூர் ஆழ் கடல் குழாயில் அம்மோனியா வாயு கசிவு: 30க்கும் மேற்பட்டோர் மயக்கம் 

எழுதியவர் Sindhuja SM
Dec 27, 2023
08:29 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் எண்ணூரில் உள்ள ஆழ் கடல் குழாயில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. பெரியகுப்பத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்று 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், நள்ளிரவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதை ஊழியர்கள் உணர்ந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வாயு கசிவு குறித்த செய்தி விரைவில் பரவி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பிரச்சனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆவடி காவல் இணை ஆணையர் பி.ஜயகுமார் தெரிவித்துள்ளார். வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ள ஒரு போலீஸ் குழு பிரச்சினையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், குடியிருப்பாளர்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூட வேண்டும், முககசங்களை அணிய வேண்டும் என்பது போன்ற வாட்ஸ்அப் செய்திகள் பரவலாக பரவி வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

வாயு கசிவினால் கடல் நீரில் 10 மடங்கு அம்மோனியா அதிகரிப்பு

ட்விட்டர் அஞ்சல்

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி