NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது
    இந்தியா

    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    March 04, 2023 | 01:50 pm 0 நிமிட வாசிப்பு
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது

    ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடியில் வைகை நகரை சேர்ந்த சிகாமணி (44), இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஆவார். இவரும் இவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமது(36) என்பவரும் இந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்ட மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு இந்த மாணவியை அழைத்து சென்ற இவர்கள் அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களோடு புது நகரை சேர்ந்த பிரபாகரனும்(42) இணைந்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

    மாணவியின் பெற்றோர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள். சிகாமணி நடத்தும் நிறுவனத்தில் பணியாற்றுபவர் கயல்விழி(45), இவர் இந்த மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்துவருகிறார். தனது பள்ளிக்கு பணம் கட்டமுடியாமல் தனது பெற்றோர் கஷ்டப்படுவதாக கயல்விழியிடம் அந்த மாணவி கூறியுள்ளதாக தெரிகிறது. அதற்கு கயல்விழி தனது முதலாளியிடம் பணம் வாங்கி தருவதாக கூறி அந்த மாணவியை சிகாமணியிடம் கொண்டுவந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கயல்விழி மற்றும் அவருடன் பணியாற்றும் அன்னலட்சுமி என்னும் உமா(34) ஆகியோர் மீது இச்செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிகாமணி, பிரபாகரன் மற்றும் ராஜா முகமது ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் இவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ராமநாதபுரம்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட செய்திகள்
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன் காவல்துறை
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது இந்தியா
    தமிழகத்தில் அட்டை மூலம் ஆவின் பாலினை மாதந்தோறும் பெற ஆதார் கட்டாயம் இந்தியா
    தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம் சமூக வலைத்தளம்

    மாவட்ட செய்திகள்

    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது கோவை
    மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மதுரை
    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023