ஜி20 மாநாடு - டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இந்தியா தலைமையில் இந்தாண்டு ஜி20 அமைப்பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதன் 18வது ஜி20 மாநாடு டெல்லியில் வரும் செப்.,9, 10 தேதிகளில் நடக்கவுள்ளது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளின் அதிபர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் டெல்லிக்கு வருகைத்தரும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறது என்று கூறப்படுகிறது. அதன்படி அமெரிக்கா அதிபரான ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார். அவரை டெல்லி விமானநிலையத்தில் மூத்த தலைவர்கள் வரவேற்றனர், உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி-ஜோ பைடன் உள்ளிட்ட இருநாட்டு தலைவர்கள் இடையே இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.