ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
இரு தினங்களாக வடமாநிலங்களில் தலைப்பு செய்தியாக வலம் வரும், 'மஹாதேவ்' சூதாட்ட செயலியின் பின்புலம் என்ன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியாவின் வடமாநிலங்களில் 'மஹாதேவ்'ஆன்லைன் சூதாட்ட-செயலி மூலம் லட்சக்கணக்கானோர் தங்கள் பணத்தினை இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானதும், இது குறித்த விசாரணையில் இறங்கியது அமலாக்கத்துறை.
இந்த செயலியை நடத்தி வருவது, கருப்புப் பண சூழ்ச்சியாளர்களான சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் எனத்தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை வளையத்தை நீடித்த அமலாக்கத்துறை மும்பை, கொல்கத்தா, போபால் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து, ரூ.417கோடி பறிமுதல் செய்தது.
விசாரணை
பாலிவுட் நடிகர்களை விளம்பர தூதர்களாகிய சூதாட்ட செயலி
இதனிடையே இந்த ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகர் கபில் ஷர்மா, ஹினா கான் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்டோர் பணம் பெற்றதாக தகவல்கள் வெளியானது.
இவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது அமலாக்கத்துறை.
இந்த செயலியின் பின்புலத்தில் இருக்கும் 2 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் மற்றும் லுக்அவுட் சுற்றறிக்கையை பிறப்பித்துள்ளது.
அப்போது தான், இந்தியாவே வியக்க ஆரம்பித்தது. யார் இந்த சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல்? எப்படி இவர்களை ரேடாருக்குள் கொண்டு வந்தது?
கருப்புப் பண சூழ்ச்சியாளர்களான சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட உலகில் இரு பெரும் பெயர்கள்.
card 3
மஹாதேவ் செயலி மூலம் ஒருநாளைக்கு ரூ.200 கோடி வருமானம் ஈட்டிய நபர்கள்
இவர்களது நெட்வொர்க் இந்தியாவில் மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சத்தீஸ்கரின் பிலாயிலை பூர்வீகமாக கொண்டவர்கள்.
ஆரம்ப காலத்தில் டையர் கடையும், ஜூஸ் கடையும் வைத்திருந்த இருவரும், தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்துக்கள் வைத்துள்ளனர்.
இருவரும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள்.
ஒரு கட்டத்தில், தங்களிடம் இருந்த சேமிப்புடன், இருவரும் துபாய் சென்று, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவருடன் இணைந்து, இந்த மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலியை துவக்கியுள்ளனர்.
இதன்மூலம், சூதாட்ட உலகில், தங்களுக்கென்று ஒரு 'பெயரை' உருவாக்கினர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்காக, இந்தியாவில் சுமார் 4,000 பேனல் ஆபரேட்டர்கள், ஒவ்வொரு பேனல் ஆபரேட்டருக்கும் 200 வாடிக்கையாளர்கள் பந்தயம் கட்டுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
card 4
ஆடம்பர திருமணத்தால் சிக்கிய கும்பல்
இந்த செயலியின் மூலம், இருவரும் தினமும் குறைந்தது ₹ 200 கோடி சம்பாதித்து , ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு 'பேரரசை' உருவாக்கயுள்ளனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சௌரப் சந்திரகர் திருமணம் செய்துகொண்டபோது, அந்த பிரமாண்டமான திருமண விழாவை ஏற்பாடு செய்வதற்காக ₹ 200 கோடி பணத்தை ரொக்கமாக செலவழித்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தனது குடும்பத்தை, பிலாய் மற்றும் நாக்பூரிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கூட்டிவர, ஒரு தனியார் ஜெட் வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
மேலும், 14 பாலிவுட் பிரபலங்களை திருமணத்திற்கு அழைத்துள்ளார். இவை அனைத்துமே, அமலாக்க துறையினர் வலையில் சிக்க காரணமாகியுள்ளது.
இவர்கள் இருவரும் தற்போது வெளிநாடுகளில் பதுங்கியுள்ளதால், கைது செய்வதில் சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளது.