Page Loader
மீண்டும் மணிப்பூரில் வன்முறை: சாலை மறியல், டயர்கள் எரிப்பு
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மீண்டும் மணிப்பூரில் வன்முறை: சாலை மறியல், டயர்கள் எரிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jul 22, 2023
10:40 am

செய்தி முன்னோட்டம்

மணிப்பூர் தலைநகரான இம்பாலின் காரி பகுதியில் உள்ள ஒரு பிரதான சாலையை மறித்து பெண் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் அங்கு வன்முறைகள் பதிவாகியுள்ளன. போராட்டத்தின் போது டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், வன்முறைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து, ஆயுதம் ஏந்திய போலீசார், ராணுவம் மற்றும் விரைவு நடவடிக்கை பட்டாலியன் ஆகிய படைகள் போராட்டக்காரர்களை ஒடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்ற படைகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

பிஜ்க்க்

பல வன்முறை சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடந்து வருகிறது

மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக இனக்கலவரம் நடந்து வருகிறது. அங்கு நடந்த இன மோதல்களால் இதுவரை குறைந்தது 160 பேர் பலியாகியுள்ளனர். மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்ப்பது தொடர்பான பிரச்சனையால் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. இதற்கு எதிராக 33 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி 33 பழங்குடியின சமூகங்கள் சேர்ந்து, மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இந்த பேரணியை தொடர்ந்து வன்முறை வெடித்தது. தீ வைப்பு, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொலை போன்ற பல சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அம்மாநிலத்தில் நடந்து வருகிறது.