LOADING...
மே 25-ல் பத்மஸ்ரீ விருது பெறுகிறார் 'ஆபரேஷன் கக்கூன்' நாயகன் கே.விஜய்குமார் ஐபிஎஸ்
முன்னாள் சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் கே.விஜய்குமார் IPS

மே 25-ல் பத்மஸ்ரீ விருது பெறுகிறார் 'ஆபரேஷன் கக்கூன்' நாயகன் கே.விஜய்குமார் ஐபிஎஸ்

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2026
07:00 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் துணிச்சலான காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான முன்னாள் சிஆர்பிஎஃப் (CRPF) தலைமை இயக்குநர் கே.விஜய்குமார் ஐபிஎஸ் அவர்களுக்கு, நாட்டின் உயரிய விசுவாசமிக்க சேவைக்காக 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 25 அன்று புதுடெல்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரிடம் இந்த விருதை வழங்க உள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஐந்து தசாப்தங்களாகத் தனி முத்திரை பதித்த ஒரு மாபெரும் அதிகாரிக்குக் கிடைக்கும் தகுதியான அங்கீகாரம் இதுவாகும். இந்த தருணத்தில் இவரை பற்றி ஒரு சிறு குறிப்பு.

வீரப்பன்

வீரப்பனை வீழ்த்திய 'ஆபரேஷன் கக்கூன்'

தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 1975-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான கே.விஜய்குமார், ஒட்டுமொத்த இந்தியாவாலும் அறியப்பட மிக முக்கியக் காரணம், சந்தனக்கடத்தல் வீரப்பனை ஒழித்ததாகும். கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையின் (STF) தலைவராக இருந்தபோது, 'ஆபரேஷன் கக்கூன்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தியின் மூலம் இரண்டு தசாப்தங்களாக நீடித்த தேடுதல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொழில்

சென்னை கமிஷனர் டூ தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

பட்டுக்கோட்டையில் ஏஎஸ்பி-யாகத் தனது பணியைத் தொடங்கிய விஜய்குமார், தர்மபுரி, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பி-யாகப் பணியாற்றினார். 2001-இல் சென்னை மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்று, ரவுடிசத்தை ஒடுக்கினார். கார்கில் போரின் போது காஷ்மீரில் பிஎஸ்எஃப் ஐஜியாக 50,000 வீரர்களை வழிநடத்தினார். தொடர்ந்து சிஆர்பிஎஃப் பொது இயக்குநராகவும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றி மாவோயிஸ்ட் வன்முறைகளைக் கட்டுப்படுத்தினார். ஜம்மு காஷ்மீரில் 'பிரிவு 370' ரத்து செய்யப்பட்ட மிக முக்கியமான காலகட்டத்தில், அங்குள்ள ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டினார்.

Advertisement

அங்கீகாரம்

படிப்பு மற்றும் பதக்கம்

பாலக்காடை பூர்வீகமாக கொண்ட விஜய் குமார், தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். சட்டத்தில் இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்ற சிறந்த படிப்பாளியும் ஆவார். வீரப்பனைப் பிடித்ததற்காக 2005-இல் குடியரசுத் தலைவரின் புகழ்பெற்ற வீரப் பதக்கம் உட்படப் பல முக்கியப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய 'Veerappan: Chasing the Brigand' என்ற புத்தகம் உலகளவில் புகழ்பெற்றது. ஓய்வுக்குப் பிறகும் நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்காகத் தொடர்ந்து பங்காற்றி வரும் விஜய்குமாருக்கு வழங்கப்படும் இந்தப் பத்மஸ்ரீ விருது, ஒட்டுமொத்த தமிழக காவல் துறைக்கும் கிடைத்த பெருமையாகும்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விருதுகள் முயற்சி

#PeoplesPadma என்பது என்ன?

அடித்தட்டு சாதனையாளர்களுக்குப் பொது மற்றும் சுய பரிந்துரைகளை ஊக்குவிப்பதன் மூலம் பத்ம விருதுகளை மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்காக, இந்திய அரசால் #PeoplesPadma அல்லது மக்கள் பத்ம முயற்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம், தேசிய அளவில் அறியப்பட்ட ஆளுமைகளுடன், அதிகம் அறியப்படாத நாயகர்களையும் அடித்தட்டுப் பங்களிப்பாளர்களையும் முன்னிலைப்படுத்துகிறது. இந்த விருதுகள், இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற பாகுபாடின்றி, அனைத்துத் துறைகளிலும் உள்ள சிறப்புகளை அங்கீகரிக்கின்றன. வெளிச்சத்திற்கு வராமல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களைக் கௌரவிப்பதன் மூலம், பத்மா விருதுகளை 'PeoplesPadma'வாக மாற்றுவதே இதன் பரந்த நோக்கமாகும்.

Advertisement