நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடா என்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி ஒருவர், முதன்முறையாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியை அவரும், அவரின் சமூகத்தினரும் கொண்டாடி வருகின்றனர். நீத்து சின் என பெயர்கொண்ட அந்த மாணவி, நடப்பாண்டில் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில், 145 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில், கார்டன் மந்தை பகுதியை சேர்ந்த நார்ஷ்தோர் குட்டன், நித்யா தம்பதியின் மகளான நீத்து சின், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் தோடர் இன மாணவி மட்டுமின்றி, மருத்துவம் படிக்கப் போகும் முதல் தோடா இன மாணவியும் இவரே. இவருக்கு இருதயம் சம்மந்தப்பட்ட மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்பது ஆசையாம்.