
சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பேசியதாக ஆடியோப்பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் கோடிக்கணக்கில் சொத்துச்சேர்த்து வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அது வைரலாக பரவியநிலையில், திமுக'விற்கு இதுப்பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாக, ஆலோசகராக உறுதுணையாக இருப்பவர் சபரீசன்.
உதயநிதிஸ்டாலின் மற்றும் சபரீசன் மீது எதிர்க்கட்சிகள் கூட குற்றச்சாட்டுகள் வைக்காத நிலையில்,
இதுபோல் ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
நிதி
கோழைத்தனமான முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது-நிதியமைச்சர்
மேலும் அவர், திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக சாதனை படைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
அதில் உள்ளது எனது குரல் இல்லை. நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது.
முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என கூறியதில் நானும் ஒருவன்.
திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத காரணத்தினால் மலிவான தந்திரங்கள் கொண்டு போலியான ஒலிப்பதிவு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி ஸ்டாலின். ஆற்றல்மிகு செயல்வீரரான உதயநிதி குறித்து நான் எப்படி தவறாக பேசுவேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.