இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்
செய்தி முன்னோட்டம்
இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் கருப்பு அறிக்கை ஒன்றும் இன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில், பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி மற்றும் அதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
அதில், பொருளாதாரம் சார்ந்து, UPA ஆட்சி எடுத்த தவறான முடிவுகளும், அவற்றிலிருந்து மீள, NDA அரசு எடுத்த நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வெள்ளை அறிக்கை
Centre tabled a #Whitepaper in #Parliament on Thursday, that compares the state of India’s economic performance with that of the UPA-led decade, the #Government highlighted that being the third-largest auto maker, aviation and IT hub, were helping India in creating 19-20 million… pic.twitter.com/ZvsbFNrawl
— Republic Business (@RepublicBiz) February 8, 2024