Page Loader
சிறப்பு படையினர் வனப்பகுதியில் ஆமையை கொன்று சமைத்ததாக பரவிய வீடியோ குறித்த விளக்கம் 
சிறப்பு படையினர் வனப்பகுதியில் ஆமையை கொன்று சமைத்ததாக பரவிய வீடியோ குறித்து விளக்கம்

சிறப்பு படையினர் வனப்பகுதியில் ஆமையை கொன்று சமைத்ததாக பரவிய வீடியோ குறித்த விளக்கம் 

எழுதியவர் Nivetha P
Dec 27, 2023
06:50 pm

செய்தி முன்னோட்டம்

ஈரோடு சத்தியமங்களம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது மங்களப்பட்டி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் ஆமையை கொன்று சமைப்பதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த டிசம்பர் 17ம் தேதி வைரலாக பரவியது. அந்த பதிவில் இருந்த நபர்கள் சிறப்பு இலக்கு படையினை சேர்ந்தவர்கள் என சந்தேகம் எழுந்தது. இந்த விவகாரம் சில நாளிதழ்களிலும் வெளியானது. இது பெரும் சர்ச்சைகளை எழுப்பிய நிலையில், இது குறித்த விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் சிறப்பு இலக்கு படையினை சேர்ந்தவர்கள் இல்லை என்றும், அந்த சம்பவம் தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

வனத்துறை 

சர்ச்சையை எழுப்பிய வீடியோ பதிவு 

இதுகுறித்து வனத்துறை தற்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வீடியோவில் பரவிய அந்த சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வேறொரு மாநிலத்தில் நடந்தது. அச்சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் சிறப்பு இலக்கு படையினை சேர்ந்தவர்கள் என சந்தேகிப்பதாக கூறப்பட்ட செய்தி தவறான செய்தி என்று கூறப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தின் வீடியோ பதிவு கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்திலும் வேகமாக பரவியுள்ளது. இதனை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்ததோடு, தங்கள் எதிர்ப்புகளையும் தெரிவிக்க துவங்கியுள்ளனர் என்று தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழ துவங்கியது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அறிக்கை வெளியீடு