NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல்
    இந்திய தண்டனைச் சட்டத்தில் ஈவ் டீசிங் என்ற வார்த்தை எங்குமே இடம்பெறவில்லை.

    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2023
    09:42 am

    செய்தி முன்னோட்டம்

    சட்டம் பேசுவோம்: 'ஈவ் டீசிங்' என்பது பெண்களுக்கு எரிச்சலூட்டும் செயல்களை செய்வதாகும்.

    பெண்களை எரிச்சலூட்டும் விதமாக கேலி செய்வது, கமெண்ட் அடிப்பது, சைகைகளை காட்டுவது, உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ சங்கடப்படுத்துவது ஆகியவை 'ஈவ் டீசிங்' என்று அழைக்கப்படுகிறது.

    பெண்களின் அனுமதி இல்லாமல், அவர்களது தனியுரிமையில் தலையிடும் நோக்கத்துடன் யாராவது எதையாவது செய்தால் அது ஈவ் டீசிங்காக கருதப்படும்.

    இந்திய தண்டனைச் சட்டத்தில், ஈவ் டீசிங் என்ற வார்த்தை எங்குமே இடம்பெறவில்லை.

    ஒரு பெண்ணின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை அவமதிக்கும் மனநிலை அல்லது நடத்தையை இந்திய தண்டனைச் சட்டம் ஈவ் டீசிங்காக கருதுகிறது.

    ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

    card 2

    இந்திய அரசியலமைப்பில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் 

    பிரிவு-21:

    ஒரு பெண்ணின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை காப்பது, இந்திய அரசியலமைப்பின்-21வது பிரிவின்படி அடிப்படை உரிமையாகும்.

    இதுபோக, ஈவ்-டீசிங்கால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள IPC பிரிவுகளின் உதவியையும் நாடலாம்.

    சட்டப்பிரிவு-354:

    உடல் புணர்வு அல்லாத பாலியல் வன்கொடுமை செய்தால் சட்டப்பிரிவு-354இன் கீழ் தண்டனை வழங்கப்படும்.

    சட்டப்பிரிவு-509:

    ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் பேசினால், செயல்களை செய்தால் அல்லது சைகைகளைக் காட்டினால் சட்டப்பிரிவு-509இன் கீழ் தண்டனை வழங்கப்படும்.

    சட்டப்பிரிவு-294:

    ஆபாசமாக கருதப்படும் செயல்களை செய்தல் அல்லது பாடல்களை பாடுதல் சட்டப்பிரிவு-294இன் கீழ் வரும்.

    சட்டப்பிரிவு-354:

    அனுமதி இல்லாமல் ஒரு பெண்ணை பின்தொடர்பவர்களுக்கு சட்டப்பிரிவு-354க்கு கீழ் தண்டனை பெற்று தரலாம்.

    மேலும், சட்டப்பிரிவு-354க்கு கீழ் பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்கள் 2013ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம்  அமெரிக்கா
    இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகரித்த பயணிகள் வாகன விற்பனை ஆட்டோமொபைல்
    ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம்  ஒடிசா
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025