
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை
செய்தி முன்னோட்டம்
கொரோனா வைரஸ்-ஓமிக்ரானின் XBB மாறுபாடு சீனாவில் பரவ தொடங்கி இருக்கிறது.
இது ஜூன் மாத இறுதிக்குள் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பரவல் காரணமாக, ஜூன் இறுதிக்குள், சீனாவில் ஒவ்வொரு வாரமும் 65 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வழக்குகள் பதிவாகலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், இந்த ஓமிக்ரான் மாறுபாடு ஏற்கனவே இந்தியாவில் பரவி விட்டதால், இந்தியர்கள் அதை நினைத்து கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
XBB துணை மாறுபாட்டால் சீனாவில் அடுத்த கொரோனா அலை தொடங்கி இருக்கிறது.
ஏப்ரல் மாத கடைசியில் இருந்து அங்கு கொரோனா அதிகரிக்க தொடங்கியது.
மே மாத இறுதிக்குள் ஒவ்வொரு வாரமும் 40 மில்லியன் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
details
இந்தியா ஏற்கனவே இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டது: INSACOG
அதன் பிறகு, கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 65 மில்லியன் பரவ தொடங்கும்.
சீனாவின் உயர்மட்ட சுவாச நிபுணர் ஜாங் நன்ஷன் இது குறித்து எச்சரித்துள்ளார்.
ஜூன் இறுதிக்குள், சீனாவில் ஒவ்வொரு வாரமும் 65 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வழக்குகள் பதிவாகலாம் என்றும், புதிய கோவிட் மாறுபாட்டை சமாளிக்க 2 புதிய தடுப்பூசிகளை சீனா உருவாக்கி வருகிறது என்றும் ஜாங் நன்ஷன் கூறியுள்ளார்.
"சீனா இப்போது எதை எதிர்கொள்கிறதோ, இந்தியா அந்த நிலையை ஏற்கனவே கடந்துவிட்டது. அதில் இருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டுவிட்டது. " என்று INSACOG இன் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்த மாறுபாடு இந்தியாவில் பரவியது. ஆனால் இதனால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை.