Page Loader
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு
தற்போது அவருக்கு அப்போல்லோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு

எழுதியவர் Sindhuja SM
Nov 05, 2023
10:46 am

செய்தி முன்னோட்டம்

சமீபகாலமாக இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை பகுதியில் அதிகமானோர் சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுக தலைவரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கு கடந்த சில நாட்களாக இதே பிரச்சனை இருந்து வந்ததாக கூறபடுகிறது. அதனால், அவர் நேற்று இரவு 1 மணியளவில் சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, தற்போது அவருக்கு அப்போல்லோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு