ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.
வாக்காளர்களுக்கு பண விநியோகம், வாக்காளர் பட்டியலில் முறைகேடு என எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி, அதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும்.
கள்ள ஓட்டுகள் போடுவதை தவிர்க்கவும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு ஏற்படுவதை தவிர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர்கள் கொடுத்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 20ம் தேதி
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தொடர்ந்து, இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
409 மத்திய காவல் படை வீரர்கள், பறக்கும் படை வீரர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
தங்களால் முடிந்தளவு சிறப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
மேலும் செய்ய முடிந்ததை சிறப்பாக செய்வோம் என்றும் அவர்கள் அளித்த விளக்க உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விசாரணையும் 20ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.